திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீர் ராஜினாமா

0 3615

திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றார். இந்நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் வழங்கியதாக பிப்லப் தேப் அறிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே, திரிபுரா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர், இன்றே அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments