பஞ்சாப்பில் மருத்துவமனையில் தீ விபத்து... அப்பகுதி முழுவதும் குபுகுபுவென பற்றி எரியும் தீ

0 2625

ஞ்சாபின் அமிர்தசரசில் குரு நானக் தேவ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. புறநோயாளிகள் பிரிவின் அருகில் இருந்த மின்மாற்றிகளில் உள்ள ஆயில் டேங்குகளில் முதலில் தீப்பற்றியுள்ளது.

அவை வெடித்ததில் அருகில் உள்ள மருத்துவமனைக் கட்டடத்திலும் தீப்பற்றியது. உடனடியாக மின்னோட்டம் துண்டிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

8 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக மின்மாற்றியில் உள்ள ஆயில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments