நாளை மறுநாள் நிகழ்கிறது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : இந்திய நேரப்படி எந்த நேரத்தில் தெரியும் ?
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை மறுநாள் நிகழ்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும் போது, சூரிய ஒளி சந்திரன் மீது விழாமல் புவி மறைப்பதால் ஏற்படக்கூடியது சந்திர கிரகணம்.
சந்திர கிரகணம் இந்திய நேரப்படி நாளை மறு நாள் காலை 7.02 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.20 மணி வரை சந்திர கிரகணம் நீடிக்கும். சுமார் ஐந்தரை மணி நேரம் நீடிக்கும் இந்த நிகழ்வு, வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் முழு கிரகணமாக தென்படும் எனவும்,
இந்திய பெருடங்கடல், பசிபிக், அட்லாண்டிக், அண்டார்டிகா கடல் உள்ளிட்ட இடங்களில் பகுதியளவு சந்திர கிரகணத்தை காண முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments