பின்லாந்துக்கு மின் விநியோகத்தை நிறுத்துகிறது ரஷ்யா.!
நேட்டோவில் இணைய விண்ணப்பித்ததை கண்டித்து பின்லாந்துக்கு மின்சார விநியோகத்தை ரஷ்யா நிறுத்த உள்ளது. உக்ரைன் போர் விவகாரத்தை அடுத்து ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய நாடான பின்லாந்து நேட்டோவில் இணைவதில் உறுதியாக உள்ளது.
இதனைக் கண்டித்து பின்லாந்துக்கு வழங்கி வரும் அனைத்து மின் விநியோகத்தையும் ரஷ்யா நிறுத்த உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மின்சார வாங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், ஏற்கன்வே வாங்கிய மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாது என்றும் பின்லாந்து தெரிவித்துள்ளது.
Comments