உலகின் மிக நீள நடைபாதை தொங்கு பாலம் செக் குடியரசில் திறப்பு
உலகின் மிக நீளமான நடைபாதை தொங்கு பாலம் செக் குடியரசில் திறக்கப்பட்டுள்ளது. இரு மலை முகடுகளை இணைக்கும் வகையில் 2 ஆயிரத்து 365 அடி நீளத்தில் ஸ்கை பிரிட்ஜ் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
8 புள்ளி 4 மில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து மூன்றாயிரத்து 600 அடி உயரத்தில் பாலம் அமைந்துள்ளதால் வானத்தின் பாலம் என அழைக்கப்படுகிறது.
மேகக் கூட்டங்களுக்கு நடுவே ரம்மியமான காட்சிகளை காணத் துடிக்கும் சுற்றுலா பயணிகளை பாலம் வெகுவாக கவர்கிறது.
Comments