திருச்சியில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மாணவனின் காலை துண்டிக்காமல் நவீன சிகிச்சை அளித்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்.!

0 6914

திருச்சியில் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவனின் காலை துண்டிக்காமல் நவீன சிகிச்சை அளித்து அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அரியமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்காதர் என்ற அந்த மாணவனுக்கு தொடை எலும்பில் 'ஆஸ்டியோ சார்கோமா' என்ற புற்றுநோய்கட்டி இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

எலும்புமுறிவு சிகிச்சைத்துறை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 6 மணி நேரம் போராடி, புற்றுக்கட்டியை அகற்றி, செயற்கை மூட்டு உபகரணத்தை வெற்றிகரமாகப் பொருத்தினர்.

தனியார் மருத்துவமனையில் சுமார் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சையானது முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டதாக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். வனிதா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments