டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம்.. உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவிப்பு..!
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் ஒரு பங்கு 54 அமெரிக்க டாலர் என்ற விலைக்கு மொத்தம் 4400 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் முடிவு செய்திருந்தார்.
தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு 45 டாலருக்கு விற்பனையாகிறது. மொத்த டிவிட்டர் பயனாளர்கள் எண்ணிக்கையில் போலி கணக்குகள் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று டிவிட்டர் நிறுவனம் மதிப்பிட்டு இருந்தது.
அது குறித்த உண்மை தகவல்களை திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதால் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் எலான மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
Comments