ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லை எட்டிய இஸ்ரோ.. ராக்கெட் பூஸ்டரின் ஸ்டேடிக் சோதனை வெற்றி என விஞ்ஞானிகள் தகவல்..!
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் முக்கிய சோதனை ஒன்றை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில், ககன்யானின் HS200 ராக்கெட் பூஸ்டரின் ஸ்திரத்தன்மையை சோதித்து பார்க்கும் Static டெஸ்ட் எனும் சோதனை செய்யப்பட்டது.
சோதனையின் போது 700 அளவுகோள்கள் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த HS200 ராக்கெட் பூஸ்டரில் 203 டன் திட எரிபொருள் ஏற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வகை ராக்கெட் பூஸ்டர்களில் உலகிலேயே 2-வது பெரிய ராக்கெட் பூஸ்டர் இது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments