91,000 குடிமைப் பணி அலுவலர்களை பணியில் இருந்து நீக்க முடிவு? அரசு செலவை குறைக்க பிரிட்டன் பிரதமர் நடவடிக்கை என தகவல்..!
அரசுக்கு ஆகும் செலவை குறைக்க 91 ஆயிரம் குடிமைப் பணி அலுவலர்களை பணியில் இருந்து நீக்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் அன்றாட வாழ்க்கை செலவு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், நலிவடைந்த குடும்பங்கள் மீது உள்ள பொருளாதார சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடிமைப் பணி அலுவலர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 3.5 பில்லியன் பவுண்ட், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments