பொருளாதாரத் தடைகளால் மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் - புடின்
பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவை விட மேலைநாடுகளுக்கே பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதையடுத்து உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத்தட்டுப்பாடு அபாயத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
Comments