ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐநா மனித உரிமைக் கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை.!
ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் தவிர்த்து விட்டன.
33 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன சீனா உள்ளிட்ட 2 நாடுகள் மட்டும் எதிர்ப்பைத் தெரிவித்தன.உக்ரைனில் மனித உரிமைகள் நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இது தொடர்பான விவாதங்களில் பங்கேற்ற இந்தியா, உக்ரைனில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி அமைதியை நிலை நிறுத்த மீண்டும் வலியுறுத்தியது.
Comments