பீஜிங்கில் ஊரடங்கு பீதியால் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்
சீனா தலைநகர் பீஜிங்கில் ஊரடங்கு பீதியால் சூப்பர் மார்க்கெட்டுகளில் திரண்ட மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.
பீஜிங்கில் மீண்டும் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால் மறுபடியும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என மக்கள் எண்ணத் தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.
வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாக காணப்படுகின்றன. அதேநேரம் ஊரடங்கு அறிவிப்புகள் வதந்தி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments