நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படியாடா பண்ணுவ..? மனைவியையே திருடுனா எப்படி ?

0 102786
நண்பன்னு நம்பி வீட்டுக்குள்ள விட்டா இப்படியாடா பண்ணுவ..? மனைவியையே திருடுனா எப்படி ?

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நண்பனின் மனைவியை விபரீத காதலில் வீழ்த்திய இளைஞர் ஒருவர், ஓடும் பேருந்தை பைக்கில் விரட்டிச்சென்று தாயிடம் இருந்து மகளை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமாருக்கும், மதுரையைச் சேர்ந்த கோபிகாவுக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரு வீட்டு பெரியோர்கள் முன்னிலையில் அழகு வள்ளி அம்மன் ஆலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் தொழில் நிமித்தமாக மனைவி கோபிகாவுடன் வெளியூரில் வசித்து வந்த மனோஜ் குமார் , கடந்த 2 மாதங்களாக செங்கப்படை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோபிகாவின் கணவர் மனோஜ் குமாரின் நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவர் கோபிகாவின் வீட்டிற்கு இவரது கணவர் இருக்கும் நேரத்திலும், இல்லாத நேரத்திலும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது நண்பனின் மனைவி கோபிகா மீது சபரிநாதனுக்கு விபரீத காதல் ஏற்பட்டுள்ளது. கோபிகாவும் கணவர் மனோஜ்குமாருக்கு தெரியாமல் சபரி நாதனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி தனது வீட்டிற்கு வந்த தாயுடன், கோபிகா செங்கப்படை கிராமத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் கோபிகா சொன்னபடி தாயுடன், வீட்டுக்கு செல்லாமல் மாயமானதால், தனது மனைவியை காணவில்லை என கமுதி காவல் நிலையத்தில் கணவர் மனோஜ்குமார் புகார் அளித்தார்.

போலீசார் விசாரனையில் , தாயுடன் பேருந்தில் சென்ற கோபிகாவை பைக்கில் விரட்டிச்சென்ற சபரி நாதன், தன்னுடன் வாழவருமாறு கோபிகாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றது வீடியொ ஆதாரத்தால் அம்பலமானது.

பைக்கில் சபரி நாதன் விரட்ட.... ஓடும் பேருந்தில் அமர்ந்த படி கோபிகா கதறி அழ... அருகில் இருந்த அவரது தாயார் வீட்டிற்கு பெரியவர்களுடன் வந்து பேசும்படி சபரி நாதனிடம் கூறி உள்ளார்.

தமிழ் சினிமா பாணியிலான இந்த காதல் கன்றாவியை பேருந்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்திருந்தார்.

இதனை வைத்து மனோஜ்குமார் மாமியாரிடம் விசாரித்த போது மதுரை மாட்டுதாவணி பேரூந்து நிலையத்தில் வைத்து காதலி கோபிகாவை , சபரி நாதன் பைக்கில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

நண்பன் என நம்பி வீட்டுக்குள் விட்ட பாவத்துக்கு தனது மனைவியையே காதல் என்னும் மாயவலையில் சிக்கவைத்து தூக்கிச் சென்ற துரோக நண்பன் மீது மனோஜ்குமார் புகார் அளித்த நிலையில், சபரி நாதனின் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக மீண்டும் ஒரு புகாரளித்து விட்டு மனோஜ்குமார் மனகவலையுடன் காத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments