தொண்டு நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கியதாக மத்திய அரசு அதிகாரிகள் கைது
தனியார் தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக அங்கீகாரம் பெறவும், வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கும் லஞ்சம் வாங்கியதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் 6 பேர் உட்பட 14 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இது தொடர்பாக நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் என 36 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் சிலர், தனியார் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பிக்க இடைத்தரர்கள் மூலம் மிரட்டி லஞ்சம் கேட்டதும், விதிகளை மீறி வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளை பெற உதவுவதோடு, அவ்வாறு பெறப்படும் நிதியை போலி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்ட உடந்தையாக இருந்ததும் தெரியவந்ததாக சிபிஐ கூறியுள்ளது.
Comments