புதுச்சேரி அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு...30 கிலோ இறைச்சி பறிமுதல்!
புதுச்சேரியில் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர், சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அதிகளவில் கலர் பூசப்பட்ட இறைச்சியையும், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மீன், கோழி இறைச்சி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
இது தொடர்பாக 6 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments