பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து விபத்து.. கம்பிகள் குத்தி தொழிலாளி பலி.!

0 2853

சென்னை பல்லாவரத்தில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக சுமார் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது.

காலையில் வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்ட நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த திரேஷ் சர்மா என்ற தொழிலாளி பள்ளத்திற்குள் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மேலே குவித்து வைக்கப்பட்டிருந்த மண் சரிந்து திரேஷ் சர்மா மீது விழுந்துள்ளது.

மண்சரிவில் சிக்கிக் கொண்ட திரேஷ் சர்மா கழுத்தில் கட்டுமான இரும்பு கம்பிகள் குத்தியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments