20 ஆண்டுகளுக்கு முன் சுரங்கத்தில் எடுக்கப்பட்ட வைரக்கல்... சுமார் ரூ.169 கோடிக்கு ஏலத்தில் விற்பனை!
தென் ஆப்ரிக்கா சுரங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தோண்டி எடுக்கப்பட்ட 228 கேரட் வெள்ளை வைரக்கல் ஒன்று 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏல சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய வெள்ளை வைரக்கல் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.
அதன் ஆரம்ப விலை சுமார் 109 கோடி ரூபாய் என நிர்ணையிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியில் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இதே ஏல நிகழ்ச்சியில் வரலாற்று சிறப்பு மிக்க மஞ்சள் நிற வைரக்கல் ஒன்று சுமார் 111 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
Comments