இலங்கைக்கு வழங்க அதிக விலைக்கு அரிசி வாங்கும் அரசாணைக்குத் தடை கோரி வழக்கு... உயர் நீதிமன்றம் மறுப்பு.!
இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40 ஆயிரம் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயசங்கர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய உணவுக் கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய்க்கு விற்கும் நிலையில், தமிழக அரசு 33 ரூபாய் 50 காசுகள் என்னும் அதிக விலைக்குத் தனியாரிடம் வாங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுவதாகவும், அவசர நிலைக் காலத்தில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தில் விலக்கு உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Comments