கேரளாவிற்கு லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படும் கனிம வளங்கள்.. விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு..!
கன்னியாகுமரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான எடையுடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 14 டிப்பர் லாரிகளை போலீசார் சிறைபிடித்து அபராதம் விதித்தனர்.
அதிக பாரத்துடன் செல்லும் டிப்பர் லாரிகள் அதிக வேகத்துடன் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக புகார் எழுந்ததுள்ளது.
இந்நிலையில், தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், கனிம வளங்களை ஏற்றி அணிவகுத்து வந்த 20-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 14 லாரிகளுக்கு மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.Police
Comments