பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர்.. லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், சம்பந்தபட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கமுகக்குடி கிராமத்தைச் சேர்ந்த 25வயதான மணிகண்டன் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆரம்பித்த நிலையில், முதல் தவணை தொகை வழங்க வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் 3000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் அதனை மணிகண்டன் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், 2வது தவணை தொகை வழங்கப்பட்ட பின் அதில் இருந்தும் 15ஆயிரம் ரூபாயை மகேஷ்வரன் லஞ்சமாக வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3வது தவணை தொகை வழங்க இழுத்தடிப்பு செய்ததால் மனமுடைந்த மணிகண்டன், விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, தற்கொலைக்கு முன் மணிகண்டன் பேசிய வீடியோ வெளியானது
Comments