வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று.. முழு ஊரடங்கை அமல்படுத்த அதிபர் கிம் ஜாங் உன்..!
வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்படாமல் வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் தொடர்ந்த நிலையில், தற்போது பியோங்யாங் நகரில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவசரகால மருத்துவ பொருட்களை கையிருப்பில் வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Comments