மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வது பாலியல் குற்றமாகுமா? மாறுபட்ட கருத்துகளுடன் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1652330375176588.jpg)
திருமணமான மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது குற்றமாகுமா என்பது தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் மாறுபட்ட கருத்துகளுடன் தீர்ப்பு வழங்கியுள்ளது.
193 பக்க தீர்ப்பை வாசித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு மனைவியை பலவந்தம் செய்வது பாலியல் கொடுமை ஆகாது என்று சட்டப்பிரிவுகளை சுட்டிக் காட்டி தீர்ப்பளித்தனர். ஆனால் பெண்ணை பலவந்தப்படுத்தி உறவு கொள்வது ஏற்புடையது அல்ல என்றும் குற்றம் புரிந்தவர் கணவர் என்பதால் அவர் குற்றவாளி அல்ல என்று ஆகாது என்றும் நீதிபதி ராஜீவ் சாக்தார் மாற்று கருத்து தெரிவித்தார்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
Comments