சீனாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 113 பயணிகள் உயிர்தப்பினர்

0 3576

சீனாவின் சாங்கிங்கில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத்திய ஏர்லைன்ஸ் விமானம் தீ விபத்துக்குள்ளானது.

திபெத்தின் நியிங்ச்சி நோக்கி விமானம் புறப்பட்ட சமயத்தில் பைலட்டுகள் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்து உடனடியாக அதை தரையிறக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த விமானம் ஓடுபாதையை விட்டு சற்று விலகிச்சென்று தீப்பிடித்து எரிந்தது.

அவசர அவசரமாக விமானத்தில் இருந்த 122 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். லேசாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சென்ற மீட்புப்படையினர் விமானத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments