வெளிநாடு செல்வோர்க்கு ஏதுவாக பூஸ்டர் டோஸ் கால இடைவெளியை குறைக்க மத்திய அரசுத் திட்டம் எனத் தகவல்
வெளிநாடு செல்வோர்க்கு ஏதுவாக இரண்டாவது மற்றும் முன்னெச்சரிக்கை டோசுக்கு இடையிலான கால அளவை 3 மாதமாக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னெச்சரிக்கை டோஸ் கால இடைவெளியை குறைப்பதற்கான முன்மொழிவை மத்திய அரசிடம், நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு வழங்கி உள்ளது.
கல்வி, வேலை, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர் அந்தந்த நாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பூஸ்டர் டோசை முன்கூட்டியே செலுத்திக் கொள்ளலாம் என தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
Comments