அசானி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்!
மேற்கு மத்திய வங்க கடலில் உருவான அசானி தீவிர புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி ஆந்திராவின் மசிலிபட்டினம் மற்றும் நரசாபூர் கடற்கரை நோக்கி நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், இடையிடையே காற்றின் வேகம் மணிக்கு 75 கிலோ மீட்டர் வரை அதிகரித்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மேலும் வடக்கு நோக்கி ஏனாம், காக்கிநாடா, துனி கடற்கரை வழியாக நகர்ந்து வியாழக்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments