பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி வழக்கு.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகள்..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,பேரறிவாளனை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்தது.
வழக்கு விசாரணையின் போது, அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா? ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன், பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியதற்கு என்ன கூற விரும்புகிறீர்றீகள்? என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தும் வழக்குகள், குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
Comments