போலி சான்று கொடுத்து பதவி உயர்வு பெற்ற 7 பேர்... சான்றிதழ்களை ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை!

0 3709

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பதவி உயர்வு வாங்கிய 7 பேரின் சான்றிதழ்களை ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரல்லா பணியாளர்களாக பணியாற்றும் 7 பேர், தட்டச்சுத் தேர்வு எழுதி தேர்வானதாக போலிச் சான்று சமர்ப்பித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், அவர்களது  சான்றிதழ்களை ரத்து செய்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அவர்களுக்கு உதவிய தனியார் தட்டச்சு பயிற்சிப்பள்ளி நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments