என் கூட வர்ரியா...? ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பாதிக்கலாம்...! சாட்டையடி பிச்சைக்காரர் எகத்தாளம்..!

0 27318

கடை ஒன்றில் பிச்சை கேட்டு சென்ற சாட்டையடி இளைஞரிடம், கடையில் வேலை பார்க்கிறாயா என்று கடைக்காரர் சொல்ல, தன்னுடன் பிச்சை எடுக்க வந்தால் தினமும் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று பிச்சைகார இளைஞர் எகத்தாளம் பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது.

திரைப்படம் ஒன்றில் தனக்கு பழைய சோற்றை பிச்சையிடும் கவுண்டமணியிடம் என்கூட வர்ரியா 3 வேளையும் சுடு சோறு பிச்சையாக கிடைக்கும் என்று பிச்சைக்காரர் எகத்தாளம் பேசுவார், அதே போன்ற சம்பவம் ஒன்று நிஜத்தில் அரங்கேறி உள்ளது.

கடை ஒன்றில் பிச்சைக் கேட்டு சென்ற சாட்டையடி இளைஞரிடம், தனது கடையில் வேலைக்கு ஆள் இல்லை வேலை செய்கிறாயா தினமும் 400 ரூபாய் சம்பளமாக தருகிறேன் என்று கடையின் உரிமையாளர் கூறி உள்ளார்

அதற்கு கொஞ்சமும் கூச்சமின்றி அந்த பிச்சைக்கார இளைஞனோ, தனக்கு தினமும் பிச்சை எடுப்பதன் மூலம் 2000 ரூபாய் கிடைக்கின்றது. நான் ஏன் வேலை செய்யனும் என்றபடியே மீண்டும் பிச்சை கேட்டார்

அவனது பதிலால் அசந்து போன கடைக்காரரோ, ஆளாளுக்கு பிச்சை போட்டால் உனக்கு ஏன் அவ்வளவு வருமானம் வராது என்று சொல்ல , என் கூட வர்ரியா தினமும் 2000 ரூபாய் கிடைக்கும் என்று அவரிடம் எகத்தாளம் பேசியவாரே அந்த பிச்சைக்கார இளைஞர் அங்கிருந்து சென்றுள்ளார்

அவர்கள் பேசிய வசனத்துடன், இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது.

நம்ம ஊரில் உழைப்பவனுக்கும், ஊதாரியாய் பிச்சை யெடுத்து சுற்ற்றுபவனுக்கும் இதாங்க வருமானம் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments