2 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுறாவின் 10 செ.மீ நீள பல்லை கடற்கரையில் கண்டெடுத்த சிறுவன்
2 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வாழ்ந்த ராட்சத சுறா மீனின் பல்லை இங்கிலாந்து நாட்டு சிறுவன் ஒருவன் கடற்கரையில் கண்டெடுத்துள்ளான்.
மெகலோடான் என்றழைக்கப்படும் பெரும்பல்லன் சுறா பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்து போன சுறா மீன் இனமாகும்.
60,000 கிலோ எடையும், 60 அடி நீளம் வரை வளரக்கூடிய மெகலோடான் சுறாக்கள் திமிங்கலங்களையே வேட்டையாடும் ஆற்றல் படைத்தவை. புதைபடிவங்களுக்கு பெயர் பெற்ற பாட்சே கடற்கரையில், மெகலோடான் சுறா மீனின் 10 செண்டிமீட்டர் நீள பல்லை 6 வயது சிறுவனான சாமி ஷெல்டன் கண்டெடுத்துள்ளான்.
Comments