இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்பாது - இந்திய தூதரகம்

0 3593

லங்கையில் வன்முறை நீடிக்கும் நிலையில், இந்தியா தனது படைகளை அங்கு அனுப்புவதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கொழும்புவிலுள்ள இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளியாகும் தகவல் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்றது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும்,  ஜனநாயகத்தை நிலை நாட்டவும் இந்தியா துணைநிற்கும் என ஏற்கனவே வெளியுறவுத்துறை தெரிவித்ததையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments