ஐ.நா. தகவல்களை இந்தியில் பரப்ப இந்திய அரசு 8 இலட்சம் டாலர் நிதியுதவி
உலக நாடுகளில் உள்ள இந்தி பேசும் மக்களுக்கு ஐ.நா.பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு இந்தியாவின் பங்களிப்பாக எட்டு இலட்சம் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் தகவல்களை உலக நாடுகளில் உள்ள இந்தி பேசும் மக்கள் அறிந்துகொள்வதற்காக இந்தி மொழியில் பரப்புவதற்காக 2018ஆம் ஆண்டு ஐ.நா.வின் உலகளாவிய தகவல் தொடர்புத் துறையும் இந்திய அரசும் இணைந்து ஒரு திட்டத்தைத் தொடங்கின.
இந்தத் திட்டத்துக்கு இந்தியாவின் பங்களிப்பாக எட்டு இலட்சம் டாலர் காசோலையை ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ரவீந்திரா வழங்கினார்.
Comments