தேசத்துரோக வழக்குப் பதிய வேண்டாம் - உச்ச நீதிமன்றம்
தேசத் துரோக வழக்குச் சட்டப் பிரிவை மறுஆய்வு செய்து முடிக்கும் வரை அந்தப் பிரிவின்படி வழக்குப் பதியக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே தேசத் துரோக வழக்குகளில் சிறையில் இருப்போர் பிணை கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், அந்தக் கோரிக்கையை விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தேசத்துரோகக் குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவதை எதிர்த்துத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது.
அதற்குப் பதிலளித்த மத்திய அரசு, பொதுநல வழக்கை ஏற்றுக்கொண்டு தேசத்துரோக வழக்குப் பதிவதற்குத் தடை விதிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும், தவறான எடுத்துக்காட்டாகிவிடும் என்றும் தெரிவித்தது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேசத்துரோக வழக்குப்பதியும் சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.
Comments