சமையல் எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு..எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலினை!
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடி அதிகரிக்கப்பட வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடியே 60 லட்சம் டன் சமையல் எண்ணெய் தேவைப்படும் நிலையில், அதில் பாதி, அதாவது ஒரு கோடியே 30 லட்சம் டன் சமையல் எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
அதிலும் இந்தோனேஷிய அரசு பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்ததால், இந்தியாவிலேயே எண்ணெய் வித்துப்பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
Comments