உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை விரைவுபடுத்தும் சட்ட முன்வடிவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்!
ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவு படுத்துவதற்கான கடன் குத்தகை சட்ட முன்வடிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை தோற்கடிக்க ராணுவ உதவிகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம் தற்போது, உக்ரைனுக்காக புதுப்பிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இச்சட்டம் அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்குவதை எளிதாக்குகிறது.
உக்ரைனுக்காக கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நிதி வழங்குவதற்கான கோரிக்கையையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் முன்வைத்தார்.
Comments