மின் வாகனங்களுக்கான பேட்டரி செல்கள் இந்திய சூழல்களுக்கு ஏற்றதாக இருக்காது -நிதி அயோக் உறுப்பினர் தகவல்
நாட்டில் பல இடங்களில் மின் வாகனங்கள் தீவிபத்திற்குள்ளான நிலையில், அந்த வாகனங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பேட்டரி செல்கள் இந்திய சூழல்களுக்கு ஏற்றதாக இருக்காது என நிதி அயோக் உறுப்பினரும் விஞ்ஞானியுமான சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், பேட்டரி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இந்தியா பேட்டரி செல்களை தயாரிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், இந்தியாவில் அதற்கான உற்பத்தி ஆலைகளை விரைவில் அமைக்க வேண்டும் என்றும், அதில் தயாரிக்கப்படும் பேட்டரி செல்கள், அதிக வெப்பநிலை உள்ள இந்திய நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சரஸ்வத் குறிப்பிட்டுள்ளார்.
Comments