பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை குறைக்க மலேசிய அரசு பரிசீலனை
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மலேசிய அரசு பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை குறைக்க முன்வந்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரால் சூரியகாந்தி எண்ணெய்க்கும், இந்தோனேஷிய அரசின் தடை உத்தரவால் பாமாயிலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கி கொண்டு, உலகின் இரண்டாவது பெரிய பாமாயில் உற்பத்தி நாடான மலேசியா, பாமாயில் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, வங்கதேசம், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, 8 சதவீதமாக உள்ள ஏற்றுமதி வரியை 4 முதல் 6 சதவீதமாக குறைக்க அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
Comments