பெண்ணின் வயிற்றில் போதைப் பொருள்.. "அயன்" பட பாணியில் அரங்கேறிய கடத்தல்..!

0 6443

"அயன்" திரைப்பட பாணியில் சார்ஜாவிலிருந்து கோவைக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை கேப்சூல் வடிவில் வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வந்த உகாண்டா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார்.

கடந்த 6ஆம் தேதி கோவை விமான நிலையம் வந்த அந்தப் பெண் திருப்பூர் பின்னலாடை தொழிலதிபர்களை சந்திக்க வந்ததாகக் கூறியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, ஸ்கேன் செய்து பார்த்தபோது, வயிற்றில் கேப்சூல் வடிவில் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வயிற்றில் இருந்த 81 கேப்சூல்களை பறிமுதல் செய்த போலீசார், உகாண்டா பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments