சென்னை புறநகர்ப் பகுதியில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகனங்கள் உற்பத்தி தொழிற்சாலை!
அசோக் லெய்லேண்டின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, சென்னை புறநகர்ப் பகுதியில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு 30 ஆயிரம் இலகுரக மின்சார சரக்கு வாகனங்களையும், 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டில் 600 மின்சாரப் பேருந்துகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மகேஷ்பாபு, அடுத்த ஐந்தாண்டுகளில் 15 ஆயிரம் சரக்கு ஆட்டோக்களைத் தயாரிக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.
Comments