பிரேசிலில் கனமழை, மண்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 2985

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொட்டித் தீர்த்த கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். Santa Catarina மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள Tubarao நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றன.

இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments