காருடன் சென்றவர் கருகிய நிலையில் கிடந்ததால் திகில்..! தீ வைத்தது யார்?

0 3701
காருடன் சென்றவர் கருகிய நிலையில் கிடந்ததால் திகில்..! தீ வைத்தது யார்?

திருவள்ளூர் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை பார்க்கச் சென்ற ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வானகரம் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். 61 வயதான இவர் பெங்களூரு பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் .

கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவி குழந்தைகளை பிரிந்து சகோதரர்களுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் பகுதியில், தான் வாங்கி வைத்திருந்த நிலத்தை பார்ப்பதற்காகச் சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக குணசேகரன் வீட்டிற்கு திரும்பாததால் அவருடைய சகோதர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, அங்கு சென்று பார்த்தபோது காரின் முன்பக்கம் தீயில் எரிந்து கருகிய நிலையில் குணசேகரான் சடலமாக கிடப்பதை உடலை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற மணவாளநகர் போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

மனைவியை பிரிந்து வாழ்ந்த குணசேகரனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில், மற்றொரு மகள் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வருகின்றார்.

பணி ஓய்வுக்கு பின்னர் கிடைத்த பணத்தை குணசேகரன் வீட்டுக்கு செலவு செய்யாமல் உடன்பிறந்த சகோதர்களுக்கு அடிக்கடி பணத்தை செலவு செய்து வந்ததால், மனைவி ஷியாமளா, தனது கணவனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் கடந்த 13 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

குடும்பத்தை பிரிந்து வாழும் ஏக்கத்தில் குணசேகரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது தீயிட்டு கொளுத்தி கொலை செய்தார்களா? என்ற இரு கோணங்களில் மணவாளநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது நிலத்தை பார்க்க வேண்டும் என்று சிலர் அழைத்துச்சென்ற நிலையில்தான் குணசேகரன் உயிரிழந்ததாக கூறப்படுவதால், குணசேகரனுடன் செல்போனில் பேசியவர்களின் விவரங்களை ஆய்வு செய்து அழைத்து சென்றது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments