நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை அசானி புயல் நெருங்கக் கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென் கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதிகளை நெருங்கக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் அசானி புயல் விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் பூரிக்கு தெற்கு தென் கிழக்கே 680 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதியை நெருங்கும் எனவும், அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயல் படிப்படியாக வலுவிழக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஒடிசா மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ள வானிலை மையம், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
Comments