அசானி புயல் வலுப்பெற்று வடமேற்கு நோக்கி நகர்கிறது - வானிலை ஆய்வு மையம்!
அசானி புயல் வலுப்பெற்ற நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தமான் கடலில் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்தப் புயல் நாளை மதியம் அல்லது மாலை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு பூரி அருகே மே 11 ஆம் தேதி புயல் கரையை ஒட்டி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும் அதற்குள் அது வலுவிழக்கும் என்பதால் பலத்த காற்று வீச வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளை மாலை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments