ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஜி 7 நாடுகள் உறுதி.!

0 2611

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்துவதற்கு ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உறுதி கொண்டுள்ளனர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய ஜி 7 நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.

தூண்டுதல் இல்லாமல் போரைத் தொடங்கிய ரஷ்யா ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கடும் வன்முறையை ஏற்படுத்தி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய மக்களின் வரலாற்றுப்பூர்வமான தியாகங்கள் இந்தப் போரால் தலைகுனிவை சந்தித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments