முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு... மாலையில் இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம்!
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசன துறை கூடுதல் செயலர் டி.கே.ஜோஸ், நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழு இன்று மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறது.
மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Comments