ஐ.பி.எல் தொடரில் பங்கேற்காதது குறித்து கிறிஸ் கெய்ல் விளக்கம்
கடந்த ஐ.பி.எல் தொடரின் போது மரியாதை குறைவாக நடத்தப்பட்டதால் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கவில்லை என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் 2018ம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். 2019 ம் ஆண்டு ஐ.பி.எல்-லில் மிகச்சிறப்பாக செயல்பட்ட போதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.
ஐ.பி.எல் போட்டிகளில் எவ்வளவோ சாதனைகள் நிகழ்த்திய பிறகும் தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால் இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Comments