கடலில் கொட்டப்படும் துறைமுகத்தில் தூர்வாரப்பட்ட கழிவுகள்.. கழிவு நீர் கடலில் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்..!
புதுச்சேரியில் செயற்கை மணற்பரப்பிற்காக, தேங்காய்திட்டு துறைமுகத்தில் தூர்வாரப்படும் மணல், கடற்கரையில் கொட்டப்படும் நிலையில் அதில் பிளாஸ்டிக் மற்றும் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
புதுச்சேரியில் கடற்கரைகளில் ஆங்காங்கே செயற்கையாக மணற்பரப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேங்காய்திட்டு துறைமுகத்தில் தூர்வாரப்படும் மணல் தண்ணீருடன் கொண்டு வரப்பட்டு, ராட்சத பைப் மூலம் கடற்கரையில் கொட்டப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கழிவுநீரும் கலந்து வருவதாக கூறும் மக்கள், கழிவு நீர் கடலில் கலப்பதனால் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.
Comments