கடந்த வாரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் பெரு நிறுவனங்களுக்கு இழப்பு.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.14 இலட்சம் கோடி குறைந்தது..!
கடந்த வாரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் மிக அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ள 10 நிறுவனங்களின் மதிப்பு இரண்டு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2225 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தை நிப்டி 691 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன.
பங்கு விலை வீழ்ச்சியால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் சந்தை மூலதன மதிப்பு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 767 கோடி ரூபாய் குறைந்துள்ளது. டாட்டா கன்சல்டன்சியின் சந்தை மூலதன மதிப்பு 42 ஆயிரத்து 847 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
Comments