தென்கிழக்கு வங்கக் கடலில் உருவானது அசானி புயல்..!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் அசானி புயல் மே 10ஆம் நாள் மாலை வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரைப் பகுதியை அடையும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை ஐந்தரை மணியளவில் புயல் விசாகப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே 970 கிலோமீட்டர் தொலைவிலும், பூரிக்குத் தெற்கு தென்கிழக்கில் 1020 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்குத் திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக உருவெடுத்து கிழக்கு மத்திய வங்கக் கடலை அடையும் எனக் குறிப்பிட்டுள்ளது. மே பத்தாம் நாள் மாலை வடக்கு ஆந்திரம், ஒடிசா கடற்கரையை அடையும் என்றும், அதன்பிறகு வடக்கு வடகிழக்கு நோக்கித் திசைதிரும்பும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக மே 10, 11 ஆகிய நாட்களில் வடக்குக் கடலோர ஆந்திரம், ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது.
Comments