தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை - மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல்!
தேச துரோகம் தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த சட்டமாக இருப்பதால் மறுபரிசீலனை தேவையில்லை என்று அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் முன்வைத்த அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
1962 ஆம் ஆண்டில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இச்சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளதையும் காலம் கடந்தும் இச்சட்டம் நவீன கால கொள்கைகளுக்கு ஏற்றபடி இருப்பதாகவும் அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது
Comments