கையபிடிச்சி இழுத்தியா..? என்ன கையபிடிச்சி இழுத்தியா…? முட்டி போட வைத்து தர்ம அடி.. அரசு ஊழியருக்கு கிடைத்த ஆப்பு..!
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த கைம்பெண்ணிடம் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சென்ற ரேசன் ஊழியர் அத்துமீறியதால் அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்...
சென்னை புதுவண்ணாரப்பேட்டை வாசர் வரதப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த 25 வயதுடைய இளம் கைம்பெண் ஒருவர் , தனது தாய் வீட்டு அருகே வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்த இளம் பெண் தன் பெயருக்கு குடும்ப அட்டை கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். ஆவணங்களை சரி பார்ப்பதற்காக கூறி சுனாமி குடியிருப்பு உணவுப்பொருள் வழங்கல் அலுவலகத்தில் பணிபுரியும் 45 வயதான உதவியாளர் அயாத் பாஷா என்பவர் அந்தப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சரி பார்ப்பதற்காக ஆவணங்கள் மற்றும் கேஸ் பில் போன்றவற்றை கேட்டு உள்ளார்.
அயாத் பாஷாவிடம் ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்தபொழுது , தான் ஒரு அரசு ஊழியர் என்றும், மாதம் 40 ஆயிரம் ரூபாய் கவர்மெண்ட் சம்பளம் வாங்குகிறேன், சம்மதமா ? எனக்கேட்டு அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகின்றது. அந்தப்பெண் கத்தி கூச்சலிட்டதும் திரண்டுவந்த அப்பகுதி மக்கள், அயாத் பாஷாவை அடித்து நொறுக்கினர்
போவோர் வருவோர் காலில் எல்லாம் விழுந்து, மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானார் அயாத்பாஷா
சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Comments